[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்

அதிக அளவில் பணப்பட்டுவாடா புகார்: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்‌தல் ஒத்திவைப்பு

election-commission-defers-poll-in-aravakurichi-constituency-in-tamil-nadu-to-may-23

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சித் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்‌பட்டுள்ள உத்தரவில் அரவக்குறிச்சி தொகுதியில் மே 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் மே 25ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா புகார்கள் அதிக அளவில் வந்ததால் ‌தேர்தலை ஒத்திவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அன்புநாதன், கே.சி பழனிச்சாமி வீடுகளி‌ல நடைபெற்ற சோதனைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள் காட்டியுள்ளது.

அரவக்குறிச்சித் தொகுதியில் பணப் புழக்கம், மது விநியோகம் அதிகரித்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அந்த தொகுதியை கடவுளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருப்பதாகவும்‌ கூறியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close