[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

“மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

dmk-president-m-k-stalin-speech-about-modi-govt

இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா என கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு  மு.க.ஸ்டாலின், முதன்முறையாக பொதுக்குழுவில் பேசினார். என் உயிரினும் மேலான கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே என தனது உரையை ஸ்டாலின் தொடங்கினார். தான் கலைஞர் இல்லை; கலைஞரைப் போல் தன்னால் பேச முடியாது எனக் கூறிய ஸ்டாலின் தலைவர் பொறுப்பை அனைவரின் அன்போடும், ஆதரவோடும் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். வாழ்நாள் முழுவதும் உழைப்பு - உழைப்பு - உழைப்பு என்றுதான் வாழ்வேன் என்றும், எதையும் முயன்று பார்க்கக்கூடிய துணிவு தனக்கு உள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது எனக் கூறிய ஸ்டாலின், மக்களாட்சியின் மதச்சார்பற்ற தன்மையைக் குலைக்க முயற்சிகள் நடக்கின்றன என்றும், சமூகத் தீமைகளை அகற்றுவதே முதல் கடமையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். சுயமரியாதை, சமத்துவம் ஆகியவற்றிலிருந்து ஒருபோதும் பின் வாங்கப் போவதில்லை என சூளுரைத்த ஸ்டாலின், நாடு முழுவதையும் காவி மயமாக்கும் மோடி அரசுக்கு முடிவு கட்ட வா என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

திமுகவின் மரபணுக்களோடு புதிய எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இன்று தான் புதிதாய் பிறந்திருக்கிறேன் என ஸ்டாலின் கூறினார். தனி மனித, ஊடக கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுத்தல் தனது நீண்ட கனவின் சில துகள்கள் என்றும் அதனை தொண்டர்களுடன் இணைந்தே நிறைவேற்ற இயலும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக அனைவரும் இருக்க வேண்டும், தொண்டர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி தலைமை இருக்கும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close