[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார்

dmk-to-name-mk-stalin-as-party-chief-on-august-28

திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்குப் பிறகு, கடந்த 14ஆம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தச் செயற்குழுக் கூட்டத்திலே  திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் கசிந்தன. 

ஆனால் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்கே உள்ளது. இதனால் விரைவில் பொதுக்குழுக் கூட்டம் கூடும் என சொல்லப்பட்டது. அதனையடுத்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுயிருந்த அறிக்கையில், திமுக பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுயிருந்தது. அதில் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தின் போது, தணிக்கைக்குழு அறிக்கை, தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுயிருந்தது. 

       

இந்தநிலையில் இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செய்தார். அதன்பின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின் கருணாநிதி படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செய்து, தாயார் தயாளு அம்மாளிடம் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை கொடுத்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close