[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

கருணாநிதி நினைவேந்தலும்.. அமித்ஷா வருகையும்..!

dmk-springs-a-surprise-invites-amit-shah-to-memorial-meeting

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க.தலைவர் அமித்ஷா பங்கேற்க இருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா உட்பட அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அமித்ஷா நலம் விசாரித்து சென்றார். கடந்த16ம் தேதி அன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து டெல்லி சென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் நடைபெற்ற வாஜ்பாய் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார்.

                        

இந்த நிலையில், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி, வாஜ்பாய் ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளில் பாஜக நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பரஸ்பரம் கலந்துகொள்வது அரசியல் நாகரீகம் என்பதை தாண்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

’முரசொலி’ பவளவிழா மற்றும் காவரி பிரச்னை தொடர்பாக திமுக நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு பாஜக அழைக்கப்படவில்லை. இந்த நிலையில் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு திமுக அழைப்பு விடுத்ததும் அதனை ஏற்றுக்கொண்டு நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க இருப்பதும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close