[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

தோனியுடன் பாஜக தலைவர் அமித்ஷா சந்திப்பு

bjp-president-amit-shah-meets-indian-cricketer-mahendra-singh-dhoni

வருகின்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ (சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்) என்ற திட்டத்தை பாஜக வகுத்துள்ளது. அதன்படி, பாஜக தலைமை 50 முக்கிய பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவது. அதோடு, பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் சேர்த்து ஒட்டுமத்தமாக ஒரு லட்சம் பேரை சந்தித்து, மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்ட வேண்டும் என்ற திட்டத்தையும் அக்கட்சி உருவாக்கியுள்ளது. 

இந்நிலையில், ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ திட்டத்தின் படி பாஜக தலைவர் அமித்ஷா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இன்று சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள தோனியின் இல்லத்தில் மாலை 6.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் இருந்தார்.

                         

சமீபத்தில் லதா மங்கேஷ்கர், கபில் தேவ், மாதுரி திக்ஸிட், தல்பீர் சிங் சுஹாக் உள்ளிட்ட பிரபலங்களை அமித்ஷா சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது, தோனியை சந்தித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close