[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

“ஜக்கையன் மீது ஏன் நடவடிக்கை இல்லை..?” சபாநாயகர் தரப்பு விளக்கம் 

18-mla-disqualification-case-speaker-explain

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன என சபாநாயகர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என தமிழக ஆளுநரை சந்தித்து கடந்த ஆண்டு தினகரன் ஆதரவாளர்கள் கடிதம் அளித்தனர். இதனை தொடர்ந்து 18 எம்.எல்.ஏகளையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி தொடர்ந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. இதனையடுத்து வழக்கை மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரிப்பார் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இன்று நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

சபாநாயகர் தனபால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது, 
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறிய அவர்கள்தான் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடமும் புகார் அளித்துள்ளனர்.கட்சி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே பிரச்னை இருந்தாலும் அதிமுக என்ற கட்சிதான் ஆட்சியிலும் இருக்கிறது.

 சபாநாயகர் தன் முடிவை அறிவிப்பதற்கு முன்பே கட்சிக்கு எதிரான தன் நிலைப்பாட்டை மாற்றி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து விட்டதால், ஜக்கையன் மீது கட்சி தாவல் தடைச் சட்டம் பாயாது. மேலும் போதுமான அவகாசம் வழங்கப்பட்ட பிறகே, தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தகுதி நீக்க விதிகளின்படி, 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான புகாரை சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வருக்கு அனுப்பி, அவரது கருத்துக்களை பெற்ற பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன.

 எனவே முதல்வரை குறுக்கு விசாரணை செய்ய கோர முடியாது என வாதிட்டார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை திங்கட் கிழமைக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close