[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

அத்வானியை நேரில் நலம் விசாரித்த ‌மம்தா - சோனியா, ராகுலுடன் சந்திப்பு

mamata-banerjee-meets-advani-kirti-azad-cong-leaders-in-parliament

பாஜக மூத்த தலைவர் அத்வானியை மேற்குவங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் அத்வானியின் அறையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். அத்வானியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக ம்மதா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியாகாந்தி உள்ளிட்டோரையும் மத்தா பானர்ஜி சந்தித்தார். மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் குலாம்நபி ஆசாத், அகமது படேல் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார். இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத், மம்தாவை சந்தித்துப் பேசியுள்ளார். 

மம்தா பானர்ஜி பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிரணியை உருவாக்கி வருகிறார். அதன் முக்கிய முயற்சியாக மேற்குவங்கத்தில் மாபெரும் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளார். அதற்காக பாஜகவில் உள்ள அதிருப்தி தலைவர்கள் உட்பட பலரையும் சூறாவளி பயணம் மேற்கொண்டு சந்தித்து வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது. 



 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close