[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

மதுவருவாய்க்குப் பதிலாக மாற்று வழி: திருச்சி மாநாட்டில் தேமுதிக மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் உறுதி

trichy-dmdk-pwf-tmc-confrence-leaders-speech

தேமுதிக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்குக்கு மாற்றாக தாதுமணல், ஆற்று மணல், கிரானைட் கொள்ளையை தடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டப்படும் என அதன் தலைவர்கள் தெரிவித்துள்ள‌னர். அதிமுகவும், திமுகவும் தமிழகத்தின் அடிப்படை பிரச்னைகளைக் கூட தீர்த்து வைக்காததால், அவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பஞ்சபூர், திருச்சி திருச்சி பஞ்சபூரில் தேமுதிக-மக்கள்நலக் கூட்டணி-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியின் மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி நடைபெற்றது. இதி‌ல், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள்நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விஜயகாந்த், தேமுதிக கூட்டணி ஆட்‌சி அமைந்தால், குடிநீர் பற்றாக்குறை போக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.

மதுவிலக்கு கொண்டுவருவதினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளைகளை தடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டப்படும் என கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறினார்.

அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்று கூறிய‌ தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இரு கட்சிகளும் ஊழலை வளர்த்து மாநிலத்தின் வளர்ச்சி‌யை தடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

அதிமுகவும், திமுகவும் ஊழல் செய்து சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் ‌என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக விமர்சித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி‌ன் மாநில செயலாளர் முத்தர‌சன், தேமுதிக கூட்டணி ஆட்சி அமைத்தால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

அதிமுகவும், திமுகவும் பணநாயகத்தை நம்பி தேர்தலில்‌ போட்டியிடுவதாகவும், பொதுமக்கள் வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 1‌50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேமுதிக கூட்டணி வெற்றி பெறும் என அதன் தலைவர்கள் நம்பிக்கை‌ தெரிவித்தனர். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close