[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை

subramanian-swamy-reaction-on-rahul-gandhi-hug-with-narendra-modi

தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது ராகுல் காந்தி அதில் பங்கேற்றுப் பேசிவிட்டு திடீரென அவையில் அமர்ந்திருந்த பிரதமரைக் கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத பிரதமர் ராகுலை மீண்டும் அழைத்து தட்டிக் கொடுத்ததோடு கைகுலுக்கினார். 

இந்நிலையில் பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி ஒரு புது சர்ச்சையை கிளப்பியுள்ளார். தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுவாமி, தன்னை ராகுல் காந்தி கட்டியணைக்க பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது என்றும் ரஷ்யர்களும், கொரியர்களும் விஷ ஊசி செலுத்தி தங்கள் எதிரிகளை வீழ்த்த இந்த முறையை கடைபிடிக்க முயல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் பிரதமர் மோடி உடனடியாக மருத்துவமனை சென்று, தனது உடலில் ஏதேனும் விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும் என்றும் சுனந்தா புஷ்கர் உடலிலும் இதே போன்று விஷ ஊசி செலுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார். ராகுல் குறித்து சுவாமி இவ்வாறு கூறியிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close