[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

தேர்தல் பரப்புரையை ரத்து செய்ததற்காக மன்னிப்பு கோரினார் ராகுல்காந்தி

rahul-gandhi-apologizes-with-people

தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை ரத்து செய்ததற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழகம், கேரளா, புதுச்சேரியில் 10 மற்றும் 11-ம் தேதிகளில் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்பாராதவிதமாக கடந்த 8-ம்தேதி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் பரப்புரைப் பயணத்தை ரத்து செய்து விட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார். பரப்புரை ரத்து செய்யப்பட்டதற்காக தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ராகுல் கூறியுள்ளார்.

மூன்று மாநிலங்களிலும் மீண்டும் பரப்புரை மேற்கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close