[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

திமுக, அதிமுக பணபலத்தை நம்பியே தேர்தலை சந்திக்கின்றன: ஜி.கே.வாசன்

gk-vasan-attacks-dmk-admk-on-power-cut-issue

திருச்சியில் நடைபெறும் மக்கள் நலக்கூட்டணி மாநாடு, தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என தமிழ்மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் காவிரி நீரை பெற்றுதராமல், விவசாயிகளை வஞ்சித்து விட்டதாக குற்றம் சாட்டினார். தி.மு.க.வும், அ.தி.மு.கவும் பணம் பலத்தை நம்பியே தேர்தலை சந்திக்கிறது. ஓட்டுக்காக இரண்டு கட்சிகளும் பணத்தை வாரிஇறைத்து வருகின்றன. தேர்தல் ஆணையம் முறையாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற ஜெயலலிதாவின் கருத்தை மறுத்த ஜி.கே.வாசன், மின்உற்பத்திக்கான திட்டங்களை தி.மு.க. அ.தி.முக ஆகிய இருகட்சிகளும் முறையாக செயல்படுத்தாததால் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்தாக கூறினார். விஜயகாந்த் குறித்து எழும் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜி.கே.வாசன், மாற்று கட்சி முதலமைச்சர் வேட்பாளரை தரக்குறைவாக விமர்சிப்பது எதிர்கட்சி தலைவர்களுக்கு நல்லதல்ல என எச்சரித்தார். தே.மு.தி.க. த.மா.க, மக்கள் நலக்கூட்டணி அறுதிப் பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கும் திருச்சியில் நடைபெறும் மக்கள் நலக்கூட்டணி மாநாடு, தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படும என ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close