[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அதிமுக அரசு ரூ.5ஆயிரத்துக்கு இலவசத்தை கொடுத்து மதுவின் மூலம் பல ஆயிரம் கோடியை பறித்துள்ளது: ராகுல் புகார்

tnelection2016-ragul-gandhi-attacks-aiadmk-government-on-alcohol-issue

அதிமுக அரசு 5 ஆயிரம் மதிப்புள்ள இலவசப் பொருட்களை கொடுத்து விட்டு, மது விற்பனையின் மூலம் பல குடும்பங்களிடமிருந்து பல்லாயிரம் ரூபாயை பறித்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். மதுரையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட போது இதனை அவர் தெரிவித்தார்.

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இதில் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக பொருளாளர் ‌ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி மக்களின் நலன் குறித்து கவலைப்படாத முதல்வராக ஜெயலலிதா செயல்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close