[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

இலவசங்களை அளிப்பதாக அதிமுக கூறுவதை நம்பி வாக்களிக்க வேண்டாம்: கருணாநிதி பரப்புரை

karunanidhi-speech-at-chennai-election-campaign

தேர்தல் அறிக்கையில் கற்பனைகளையும், இலவசங்களையும் அதிமுக அறிவித்துள்ளதாகவும், அவற்றை நம்ப வேண்டாம் என்றும் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

‌சென்னையில் ஐஸ் ஹவுஸ், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் உள்ளிட்ட தொகுதிகளில் கருணாநிதி வாகன பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், திமுகவின் வெற்றிக்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாடு காடாக மாறிவிட்டதாகவும், நாட்டில் ஏதேதோ சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மழைக் காலத்தில் பேரிழப்புகளை மக்கள் சந்தித்தபோது மக்களை மதிக்காத அதிமுக அரசை தூக்கி எறிய வேண்டும் என காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய கருணாநிதி, நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close