[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது: ரஜினிகாந்த் பேட்டி

should-not-protest-for-anything-politician-rajinikanth

போராட்ட பூமியாக இருந்தால் தொழிற்துறை, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரஜினி தலா ரூபாய் 2 லட்சம் வழங்கினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10,000 வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். உளவுத் துறையின் தோல்வியே போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவக் காரணம். சில போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன. போராட்ட பூமியாக இருந்தால் தொழிற்துறை, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். எந்த பிரச்னையாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது. போராட்டம் செய்யும்போது மக்களும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். எந்த அரசு வந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது. ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினால் அவர்கள் மனிதர்களே கிடையாது. எல்லாவற்றிற்கும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்துவது எதற்கும் தீர்வாகாது. ஒருநபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை” என தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close