[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

புதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் !

m-k-stalin-with-new-couple-has-been-attending-the-sterlite-protest-in-kachipuram

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து திமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி இன்று நடைப்பெற்ற போராட்டம் ஒன்றில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதுமணப் தம்பதியினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுசம்பவத்தின் காரணமாக 13 பேர் உயிரிழந்தனர் . இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதனையடுத்து மு.க.ஸ்டாலின் பங்கேற்ற போராட்டத்தில் புதுமணப் தம்பதியினர் கலந்துகொண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடுசம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனவரையும் போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தில் முழு அடைப்பு போரட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்த நிலையில் போராட்டத்திற்கு தமிழக மக்கள் ஆதரவை அளித்து வருகிறனர்  என்பது குற்ப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close