[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

“முழு அடைப்புக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின் வேண்டுகோள்

stalin-s-request-to

தமிழகத்தில் நாளை  நடைபெறும் கடையடைப்பு போரட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறை முன் அமர்ந்து போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து மாலை மு.க.ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போரட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்த நிலையில் தனது அதிகாரப்பூர்வ  ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்  “நாளை  அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மக்கள் பேராதரவை அளிக்க வேண்டுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close