[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இன்னும் கட்சியே தொடங்கல அதுக்குள்ள கூட்டணியா ரஜினிகாந்த்

rajinikanth-discussed-with-his-makkal-mandra-workers-in-chennai

ரஜினி மன்றத்தின் இளைஞர் அணி செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ந்து, மகளிர் அணி செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.

கடந்த சில நாட்கள் முன் நடிகர் ரஜினிகாந்த், அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் மாவட்ட செயலாளர்களையும்,  இளைஞர் அணி செயலாளர்களையும் சந்தித்து ஒழுங்கு நடவடிக்கை குழு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்ததாகவும் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து இன்று மக்கள் மன்றத்தின் மகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். அதில் மக்கள் மன்றத்தின் மகளிர் அணி உறுப்பினர்களை நியமிக்க நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளார் என தெரிகிறது. இந்தச் சந்திப்பு உணர்வுப்பூர்வமான சந்திப்பாக அமைந்ததாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆலோசனை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசியது "பெண்கள் மத்தியில் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடுகள் முன்னேறி உள்ளன எனவே ரஜினி மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்".

ஆன்மீக அரசியல் என்றால் யோசிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியதற்கு பதிலிளித்த ரஜினிகாந்த் "நான் இன்னும் கட்சியே தொடங்கவில்லை அதற்குள் கூட்டணியா" என தெரிவித்தார். பின் கர்நாடக அரசியல் பற்றிய கேள்விக்கு "ஆளுநர் பெரும்பான்மையை நிருபிக்க 15 நாட்கள் கால அவகாசம் அளித்தது கேளிக்குத்து. ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஈழத்தமிழர் படுகொலை தொடர்பான நினைவேந்தல் நடத்த மெரினாவில் காவல்துறை தடை போட்டிருக்கிறார்களே என்ற கேள்விக்கு "காரணமின்றி காவல்துறையினர் தடை போடமட்டார்கள்" என்றார். காவிரி தொடர்பான கேள்விகளுக்கு "உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு கடமையை கார்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்த ரஜினி, காவிரி தொடர்பாக நடக்கும் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த கமலின் கேள்விக்கு கட்சியே தொடங்கவில்லை கட்சி தொடங்காதபோது எப்படி பங்கேற்பது ? கமலின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் என்றார். மேலும் 2109 பாரளமன்றத் தேர்தலுக்குமுன் நீங்கள் அரசியல் கட்சியை தொடங்குவது தொடர்பான கேள்விகளுக்கு "தகுந்த நேரத்தில் அறிவிப்போம்" என்றார் ரஜினிகாந்த்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close