[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்
  • BREAKING-NEWS அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

“ஆளுநரே குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார்” - குமாரசாமி குற்றச்சாட்டு

hd-kumaraswamy-said-governor-is-encouraging-horse-trading-by-bjp-leaders-this-is-unconstitutional

பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட ஆளுநர் அதிகாரப்பூர்வமாக ஊக்குவித்துள்ளார் என மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எடியூரப்பா முதலமைச்சராக நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்பது உறுதியாகிவிட்டது. எடியூரப்பா மட்டும் நாளை பதவியேற்கிறார், மற்ற அமைச்சர்கள் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் பதவியேற்பார்கள் என்று முரளிதரராவ் கூறியுள்ளார். பதவியேற்ற நாளில் இருந்து அடுத்த 15 நாட்களில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். 

பாஜவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், மஜத தலைமையானது, 15 நாட்கள் காத்திருந்து சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது பாஜகவுக்கு எதிராக தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை வாக்களிக்க வைக்க வேண்டும். 

இந்நிலையில் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ‘ஆளுநர் எப்படி இந்தக் குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார்,  ஜனநாயகம் குழித் தோண்டி புதைக்கப்பட்டுள்ளது’ என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் இல்லாத நிலையில், ஆளுநர் பாஜகவுக்கு ஏன் 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்க உள்ளதாகவும் குமாரசாமி கூறினார். 
 
தேர்தல் முடிவுகளின் படி பாஜகவிடம் 104 இடங்கள் மட்டுமே உள்ளது. காங்கிரஸ் 78, மஜத 37 இடங்களும் மற்றவர்களுக்கு 3 இடங்களும் வென்றிருக்கிறார்கள். 2 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத நிலையில் மொத்தமுள்ள 222 இடங்களின் அடிப்படையில் பெரும்பான்மை நிரூபிக்க 112 எம்.எல்.ஏக்களின் வாக்கு தேவை. அதனால், பாஜகவுக்கு இன்னும் 8 எம்.எல்.ஏக்களின் வாக்கு தேவைப்படுகிறது. நிச்சயம் காங்கிரஸ் அல்லது மஜத கட்சியினரை தான் தனக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க வேண்டும். இதனைதான் காங்கிரஸ் மற்றும் மஜத விமர்சித்து வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close