[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

மாயமா ? கடத்தலா  ? காணாமல் போன ஜனதா தள 2 எம்.எல்.ஏ-க்கள் !

2-mla-s-missing-jd-s-legislative-party-meeting

மதச்சார்பற்ற ஜனதா தள ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் பங்கேற்காதது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல் முடிவுகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி (113 தொகுதிகள்) எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனிடையே தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே அவசரம் அவசரமாக காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்தது. பாஜக ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் அமைச்சர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டுக் கொடுக்க காங்கிரஸ் முன்வந்தது.

இந்நிலையில் தற்போது மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் அக்கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் பங்கேற்காதது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில்  நடக்கும் இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் ராஜ வெங்கடப்பா நாயகா, வெங்கட ராவ் நாதகவுடா  பங்கேற்கவில்லை. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள- காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயலும் நிலையில் 2 எம்எல்ஏக்களை காணவில்லை.

முன்னதாக கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியால் கோபமடைந்த எம்எல்ஏ-க்களை இழுக்க பாஜக திட்டம் போட்டு வருதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பேசியுள்ள பாஜகவின் ஈஸ்வரப்பா, காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதை விரும்பாத அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களை பாஜக தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close