[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

“இரண்டு மாதங்களில் திருநாவுக்கரசர் பதவி முடிந்துவிடும்” - குஷ்பூ அதிரடி

tamilnadu-congress-leader-has-been-changed-kushboo

இரண்டு மாதங்களில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாற்றப்படுவார் என அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின், தலைமை மாற்றப்பட வேண்டியது கட்டாயம் என்றும் இரண்டு மாதங்களில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்படுவார் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸுக்கு தலைமை வகிக்க இருக்கும் நபர் கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவதோடு மக்களிடமும் கொண்டு செல்லும் வல்லமை படைத்தவராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய காங்கிரஸ் கமிட்டி தலைவர், இன்னும் கூட சிறப்பாக பணியாற்றலாம் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.  கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் எப்படி மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து தீவிரமாக செயல்படுகிறதோ அதே போல தமிழகத்திலும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து காங்கிரஸ் போராட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆதலால் காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டியது கட்டாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
Related Tags : KushbooCongressTamilnaduKarnatakaTirunavukarasar
Advertisement:
Advertisement:
[X] Close