[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

“காலம்போன காலத்தில் நதிகள் இணைப்பு” - ரஜினியை சீண்டிய முதல்வர்  

edappadi-k-palaniswami-attack-rajini

காலம்போன காலத்தில் புதிய தலைவர்கள் தோன்றி நதிகள் இணைப்பு குறித்து பேசிவருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 81 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். திட்டத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

 விருதுநகரிலும் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் எனக் கூறிய அவர், தடுப்பணை கட்டுவதற்காக முதல்கட்டமாக 320 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், புதிது புதிதாக தலைவர்கள் முளைப்பதாகவும், காலம்போன காலத்தில் நதிகள் இணைப்பு குறித்து பேசி வருவதாகவும் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக முதலமைச்சர் பழனிசாமி சாடினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close