[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

“கா‌மாலைக் கண்ணுக்கு எல்லாமே மஞ்சள்தான்” குருமூர்த்திக்கு ஜெயக்குமார் பதி‌லடி

minister-jayakumar-answered-auditor-gurumurthy-critics-on-admk

தமிழகத்தில் தலைமை வெற்றிடம் இருப்பதாக ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு, காமாலைக் கண்ணால் பார்த்தால் எல்லாம் மஞ்சளாகவே தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்பது போல, ரஜினியை ஊதி கெடுத்துவிட வேண்டாம். பார்ப்பவர் கண்களில்தான் கோளாரு. எங்களை பொருத்த வரை வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது. கணக்கு பார்த்தால் அவருக்கு தெரியும். அதிமுகவில் கொள்கைகள், லட்சியங்கள் என அனைத்தும் செயல்படுத்தப்படுகிறது. 

அவர் ஆட்டிட்டர் வேலையை பார்க்காமல் அரசியல் பார்க்கிறார். அரசியல்வாதியாக இருந்தால் அவரால் அப்படி சொல்ல முடியாது. கர்நாடக தேர்தலில் கூட ஜெயலலிதாவின் கொள்கைகளைதான் அறிவித்துள்ளனர். 

அவர் நேரடியாக சொன்னாலும் தமிழ்நாட்டை பொருத்தவரை அதிமுகதான் தேர்தலில் கோலோச்சும். கனவில் இருப்பவர்களுக்கெல்லாம் நான் பதில் அளிக்க முடியாது. ஆளும் அரசே போராடுகிறது என்று குருமூர்த்தி கூறியதற்கு நன்றி. தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசிற்கு உள்ளது” என்று அவர் கூறினார்.

அதிமுக அரசுக்கு செயல்பாடு ஒன்று இருப்பதாக தெரியவில்லை என்றும் ரஜினியும், மோடியும் இணைந்தால் தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி  கருத்து தெரிவித்து இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் மூதாட்டி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு, “இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்..அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுப்பதே அரசின் கடமை. பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்து செயல்படக் கூடாது. இது அனுமதிக்க முடியாதது” என்று பதிலளித்தார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close