[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்

ஆபாசப் படம் பார்த்தவருக்கு தேர்தல் சீட் கொடுத்தவர் எடியூரப்பா - சித்தராமையா பதிலடி

siddaramaiah-reply-yeddyurappa-comment

பெங்களூர் நகரம் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என கூறிய கர்நாடக பாரதிய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு , முதலமைச்சர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.

மே 12ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு காங்கிரசும், பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் பெங்களூரு நகரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாக மாறிவிட்டதாக, பாரதிய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா குற்றஞ்சாட்டினார். மேலும் பாரதிய ஜனதா அனைத்து நிலைகளிலும் பெண்களின் நலனுக்கான பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து பேசிய உள்ள முதலமைச்சர் சித்தராமையா, சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த மூன்று பேருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கொடுத்த எடியூரப்பா, பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசலாமா என கேள்வி எழுப்பினார். உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய சித்தராமையா, பிறகு எப்படி பெண்களின் சக்தி பாரதிய ஜனதாவுடன் இருக்கும் என வினவினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close