[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மூன்றாவது அணி இல்லை! இது மக்களுக்கான கூட்டணி- சந்திரசேகர் ராவ்

kcr-lunches-with-dmk-s-stalin-both-dial-mamata-banerjee-to-discuss-federal-front

தேசிய அளவில் மக்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

மத்தியில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதித் தலைவரும், தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னை வந்த அவர், திமுக தலைவர் கருணாநிதியிடம் நலம் விசாரித்த பின், ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று உணவருந்தினார். பின்னர் ஸ்டாலின் மற்றும் சந்திரசேகர் ராவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர் வரும் அரசியல் சூழலை எதிர்கொள்வது குறித்து சந்திரசேகர் ராவ் தன்னிடம் விவாதித்தாக கூறினார். அது மட்டுமன்றி மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பங்கீட்டை மத்திய அரசியிடம் உரிமையோடு கேட்டு பெறுவது குறித்து விவாதித்தாகவும், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆரோக்கியமான பேச்சுவார்த்தையாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுபோல் பேச்சுவார்த்தை இனி தொடர்ந்து நடைபெறும் என்று கூறிய அவர், சந்திரசேகர் ராவும் பிற மாநில முதல்வர்களோடு பேசி வருவதாக தெரிவித்தார். 

பின்னர் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், எதிர்வரும் காலத்தில் தேசிய அளவில் அரசியலில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, பிற மாநிலத் தலைவர்களுடன் பேசி வருவதாக தெரிவித்தார். இது மக்களுக்கான கூட்டணி, வெகுஜன கூட்டணி, வேலையில்லா இளைஞர்களுக்கான கூட்டணி என்றார். 3வது, 4வது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை என்றும், தாங்கள் 3வது அணியும் இல்லை என்றும் விளக்கமளித்தார். மேலும் 2004ம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது மீண்டும் கருணாநிதியைச் சந்தித்ததாகவும், திமுக தலைவர் கருணாநிதி தனக்கு வணக்கம் தெரிவித்து புத்தகத்தை பரிசளித்ததாகவும் கூறினார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close