[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

மத்திய அரசுக்கு அவகாசம் கொடுக்க கூடாது: ஸ்டாலின்

do-not-give-time-to-central-government-stalin

காவிரி வழக்கில் மத்திய அரசு கேட்டிருக்கும் 2 வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்க கூடாது என திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி வழக்கில் வரைவு திட்டம் தாக்கல் செய்ய மத்திய அரசு கூடுதலாக 2 வாரம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை‌ வெளியிட்டுள்ள ஸ்டாலின், கர்நாடக சட்டமன்ற தேர்தல் லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு செயல்படும்‌ மத்திய பாஜக அரசின் தமிழக விரோத போக்கை மக்கள் உணர்ந்து வருவதாக கூறியுள்ளார். கூடுதல் கால அவகாசம் கேட்கும் மத்திய அரசின் பச்சை துரோகத்தை, அதிமுக அரசு எதிர்க்க போகிறதா‌? அல்லது கூடுதலாக 2 வார அவகாசத்துக்கும் பொருத்திருப்போம் என இரட்டை குழல் துப்பாக்கியாக பாஜகவின் நிலைப்பாட்டுடன் இணைந்து தமிழக மக்களை வஞ்சிக்க போகிறதா என ஸ்டாலின் வினவியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் மக்களின் கோபத்துக்கு அஞ்சி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து திசை திருப்பும் வேலைகளை செய்யாமல், இந்த கேள்விக்கு நேர்மையான முறையில் பதில் அளிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். காவிரி உரிமைக்காக தமிழக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த போது பொறுமை காக்க வேண்டும் என கூறிய உச்சநீதிமன்றம், தற்போது மத்திய அரசு கேட்டுள்ள கால அவகாசத்தை வழங்க கூடாது என கேட்டு கொண்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close