[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

விதி எண் 110ன் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா மீண்டும் விளக்கம்

jayalalithaa-again-clarifies-on-schemes-executed-under-rule-110

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ், வேளாண்மை, சமூக நலம் மற்றும் சத்துணவு, போக்குவரத்து ஆகிய துறைகளில், அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதியும், அக்கட்சியினரும், தொடர்ந்து, பொய் பரப்புரையில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமது ஆட்சியின் 110 அறிவிப்பின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நிறைவேற்றம் குறித்து விரிவான பட்டியலை அவர் அளித்துள்ளார்.

அந்த அறிக்கையில், பொள்ளாச்சியில் இளநீருக்கான சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரத்தில் வாழைக்கென சிறப்பு வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. போடிநாயக்கனூர், முதுகுளத்தூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் பயன்பாட்டில் உள்ளன.

அங்கன்வாடி மையங்களில், 13,984 குழந்தை நேய கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. பணிக்குச் செல்லும் பெண்கள் நலன்கருதி 13 மாவட்டங்களில் 211 மழலையர் பராமரிப்பகங்கள், மாற்றுத் திறனாளிகள் மாத உதவித் தொகை பெற குறைபாட்டின் அளவு 40%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

10 அல்லது அதற்கு மேல் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்வோருக்கு பயணத்தொகையில், 10% தள்ளுபடி. பேருந்துகளில், மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணிக்கும் திட்டத்தின் கீழ் 2,22,034 பேர் பயன்பெற்றுள்ளனர் போன்ற திட்டங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close