[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

பேத்தி பாடிய ‘கண்ணே கலைமானே’ பாடலை ரசித்த கருணாநிதி

dmk-leader-karunanidhi-hearing-kanne-kalaimaney-song

 திமுக தலைவர் கருணாநிதி, தனது பேத்தி பாடிய பாடலை ரசித்து கேட்ட வீடியோ வெளியாகியுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வு பெற்று வருகிறார். அவரது தொண்டையில் உணவு உண்பதற்கும், சுவாசிப்பதற்கும் ஏதுவாக சிறிய குழாய் பொருத்தப்பட்டுள்ளது. எனவே அவர் பேசமுடியாத நிலையில் உள்ளார். இருப்பினும் முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் அவ்வப்போது வருகை தந்து, கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 

அத்துடன் கருணாநிதியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் சந்திக்கும் வீடியோக்களும், அவ்வப்போது வெளியிடப்படுகிறது. அண்மையில் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியை சந்தித்து பேசும் வீடியோ வெளியானது. இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, அவரது பேத்தியும், மு.க.தமிழரசுவின் மகளுமான பூங்குழலி சந்திக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இச்சந்திப்பின் போது பூங்குழலி, ''கண்ணே கலைமானே'' என்ற பாடலை பாடி தனது தாத்தாவை மகிழ்வித்தார். பேத்தி பாடிய பாடலை செவிகொடுத்து கேட்ட கருணாநிதி, புன்னகைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close