காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று அறவழி போராட்டம் நடந்து முடிந்துள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிளம்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி பிரச்னைக்காக ஐபிஎல் போட்டி நடத்த வேண்டாம் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுக்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த ரஜினி ‘ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக சி.எஸ்.கே வீரர்கள் அனைவரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடலாம். அப்படி அவர்கள் செய்தால், தமிழக மக்களின் போராட்டம் தேசியளவில் கவனத்தை ஈர்க்கும். இதற்கு கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் கிரிக்கெட் மேட்ச் பார்க்கப்போகும் தமிழக ரசிகர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்துகொண்டு மைதானத்துக்குச் செல்லலாம். இந்தச் சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை என்றால் நல்லதுதான்’ என்றார்.
அசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு
“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்
பழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு
“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?
4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்