[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்படும் - முதலமைச்சர் பழனிசாமி உறுதி

tamilnadu-rights-will-be-protected-says-edappadi-palanisamy

காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தமிழ‌க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் மனுவானது, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைக்குமாறு காவேரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு முரணானதாகும் என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மனுவை நிராகரிக்கும் வகையில், வலுவான வாதங்களை எடுத்துரைக்குமாறு ‌வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அவமதிப்பு வழக்கை உடனடியாக விசாரணைக்கு‌ எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்படும் என்றும் அனுமதிக்கும் நிலையிலே மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்னையான காவிரி பிரச்னையில் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close