[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

ராகுலின் பேச்சால் ராஜினாமா செய்த கோவா காங். தலைவர்

goa-congress-president-shantaram-naik-resigns-says-was-inspired-by-rahul-gandhis-speech

ராகுல் காந்தி பேசிய ஆவேசமான பேச்சால், கோவா காங்கிரஸ் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கோவா மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சாந்தாராம் நாயக். இவர் தனது காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராகுல் இளைஞர்களுக்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்திருந்தார். 

ராகுல் காந்தியின் பேச்சால் தாம் உத்வேகம் அடைந்து தனது ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக சாந்தாராம் கூறினார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைத்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஜூலை 8ம் தேதி முதல் கோவா காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். 72 வயதான அவர், தலைமைப் பதவிக்கு 10 வருடங்களுக்கு மேல் கட்சியில் பணியாற்றியுள்ள இளைஞர்கள் வர விரும்புவதாக கூறினார். 

சாந்தாராம் 1984ம் ஆண்டு வடக்கு கோவா தொகுதியில் இருந்து மக்களவைக்கும், இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவாவில் 16 எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close