[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

‘மிஷின் வேண்டாம்’.. வாக்குச்சீட்டு முறைக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்

congress-wants-ballot-papers-back-rejects-simultaneous-polls

மின்னணு வாக்கு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடி வருகிறது. இதனால், பாஜக நேரடியாக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையும் சேர்த்தால் 21ஐ எட்டிவிட்டது. இதில், பாஜக ஒவ்வொரு முறை தேர்தலில் வெற்றி பெறும்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சியோடு ஆத் ஆத்மி, இடதுசாரிகள் கட்சிகள் தீவிரமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் 84வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. மூன்று மாநில சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல் தோல்விகளுக்கு பிறகு நடைபெறும் ஆலோசனை கூட்டம் இது என்பதால் எதிர்பார்ப்பு இருந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மோடியை விமர்சித்து சோனியா காந்தி கடுமையாக பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முக்கியமாக மின்னணு வாக்கு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. அடுத்து வரும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றால் மட்டும் தான், 2019இல் நடைபெறும் பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸால் நெருக்கடி கொடுக்க முடியும். அப்படி இருக்கையில், வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர ஏன் காங்கிரஸ் இவ்வளவு அழுத்தம் கொடுக்கிறது. 
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் டாம் வேதக்கன் கூறுகையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாக அரசியல் கட்சிகள் மற்றும் மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. சர்வதேச ஊடகங்களும் முறைகேடு செய்ய முடியும் என்பதை உறுதி வகையில் தகவல்களை தெரிவித்துள்ளது. அதனால், மின்னணு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை மீது தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு மட்டுமல்ல, ஒரே நேரத்தில் மக்களவை, மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close