[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

பதிவு செய்தமைக்கு நன்றி தமிழிசை: மய்யம் அதிரடி

thanks-for-register-tamilisai

தமிழிசையின் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை, கமல் கட்சியில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். ‘நான் நாம் ஆனோம்’ இன்றிலிருந்து நீங்கள் எங்கள் கட்சியில் உறுப்பினர் ஆனீர்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து இ- மெயில் வந்ததுள்ளதாகவும் கட்சியின் உறுப்பினர் எண் கூட அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். இப்படி கிடைக்கும் இ- மெயில் முகவரிக்கு எல்லாம் அழைப்பு அனுப்புகிறார் கமல் என தமிழிசை தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழிசையின் இந்தப்பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளது. அதில்  “உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே. நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா?. ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்கு கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை  பதிவு செய்தமைக்கு நன்றி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close