ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்ததை தன்னால் ஏற்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது குறித்து ஹெச்.ராஜா நேற்று தனது முகநூல் பதிவில், “லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு ? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில்... இன்று திரிபுராவில் லெனின் சிலை.. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை” என்ற கருத்தினை பதிவிட்டிருந்தார். பின்னர் அதனை நீக்கிவிட்டார். ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கடும் கண்டங்களை பதிவு செய்தனர்.
இதனிடையே பெரியார் சிலை அகற்றப்படும் என்ற பதிவை என் அனுமதி இல்லாமல் அட்மின் முகநூலில் பதிவு செய்துவிட்டார் என ஹெச்.ராஜா விளக்கம் கொடுத்துள்ளார். இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதயபூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்ததை தன்னால் ஏற்க முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “ ஹெச்.ராஜா வருத்தம் தெரிவிப்பது போதாது. அவரின் வார்த்தைகள் அம்பு போன்றது. ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்ததை என்னால் ஏற்க முடியாது. மன்னிப்புக் கேட்டால்கூட அதனை ஏற்க முடியுமா என்ற நிலையில் வருத்தம் மட்டுமே ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பெரியார் சிலைக்கு போலீஸ் காவல் தேவையில்லை. தமிழர்கள் பார்த்துக்கொள்வோம்” என்றார். மேலும் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தமிழர்கள் திசைத் திரும்பாமல் இருக்க வேண்டும். ஊடகத்தினரும் திசைத் திரும்பாமல் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!