[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

பெயர் கேட்டால் ‘நான் அரசியல்வாதி’ என்கிறார்: கார்த்தி மீது சிபிஐ புகார்

karti-not-cooperating-denied-sharing-phone-password-cbi-tells-court

கார்த்தி சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வலியுறுத்தியுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். நீதிமன்ற அனுமதியோடு லண்டன் சென்று சென்னை திரும்பிய அவரை சிபிஐ கடந்த 28ஆம் தேதி கைது செய்தது. சென்னை விமான நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சிபிஐ காவலில் உள்ளவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை கார்த்தி சிதம்பரத்தை வைத்து சரிபார்க்கவுள்ளதால் அவரது காவலை நீட்டிக்க வேண்டும்’ என்று கோரினார். 9 நாள் காவல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த சிபிஐ வழக்கறிஞர், இது பெரிய வழக்கு என்பதால் காவல் நீட்டிப்பு அவசியம் என்று கூறினார். 

இந்திராணி முகர்ஜி மற்றும் கார்த்தி சிதம்பரத்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, விசாரணை தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் சிபிஐ சமர்பித்தது.

மேற்கொண்டு துஷார் மேத்தா பேசுகையில், “சிபிஐ மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் விசாரணைக்காக மட்டுமே தவிர வேறு உள்நோக்கம் இல்லை. இந்த விசாரணையில் ஏராளமான உண்மைகள் வெளி வந்துள்ளது. வழக்கில் தொடர்புடைய வேறு சில நிறுவனங்களின் பெயர்களும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ரூபாய் மட்டும் இடம்பெறவில்லை டாலர்களும் இடம்பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

‘நாங்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் கார்த்தி சரியான பதில் அளிக்கவில்லை. உங்கள் பெயர் என்ன என்று கேட்டால் நான் அரசியல்வாதி என பதில் கூறுகிறார். அவரின் போனை பறிமுதல் செய்தோம். ஆனால் அவர் பாஸ்வார்டை சொல்ல மறுக்கிறார்’ என்று சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதனையடுத்து கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, “கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் எந்தச் சம்மனையும் சிபிஐ அளிக்காத நிலையில் திடீரென எங்கே இருந்து இவர்களுக்கு ஆதாரம் கிடைத்தது என்று கேள்வி எழுப்பினார். மேலும், காவல் நீட்டிப்புக்கு எந்த ஆதாரத்தையும் இது வரை சிபிஐ கொடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

விசாரணை முடிவில் கார்த்தி சிதம்பரத்தின் காவலை மேலும் 3 நாட்களுக்கு நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close