[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி - வைரலாகும் வீடியோ

dmk-leader-karunanidhi-playing-cricket-with-arulnidhi-son

கொள்ளுப் பேரனுடன் திமுக தலைவர் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. 

கடந்த 1 வருடமாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனை மற்றும் தனது கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சமீபமாக நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை எடுத்து விட்டு அவருக்கு பேச்சு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.  

தற்போது உடல் நலம் நன்கு தேறி வரும் நிலையில், கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி அளிப்பதற்காக மு.க.தமிழரசனின் பேரனும், நடிகர் அருள்நிதியின் 2 வயது மகனுமான மகிழனை அழைத்து வந்து மாலையில் அவருடன் விளையாட்டு காட்டி பேச வைத்து வருகின்றனர். கருணாநிதியின் பேச்சு பயிற்சிக்கு உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியன் பேரில், மாலையில் மகிழனுடன் கருணாநிதி மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், கருணாநிதி தனது கொள்ளுபேரன் மகிழனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மகிழன் பேட்டிங் செய்ய கருணாநிதி நாற்காலியில் அமர்ந்தவாறு பந்து போடுகிறார்கள். அப்போது, துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

         

கருணாநிதி முன்பை விட ஆரோக்கியமாக உள்ளதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ அவரது தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close