[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

காமாலைக் கண்களோடு ஸ்டாலின் விமர்சிக்கிறார்: தமிழிசை காட்டம்

tamilisai-soundararajan-on-mk-stalin-budjet-2018

எல்லாதரப்புக்கும் நன்மை தரும் பூமாலை பட்ஜெட்டை காமாலைக் கண்களோடு பார்த்து மு.க.ஸ்டாலின் விமர்சிக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

2018-19 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

இந்நிலையில், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படாவிட்டாலும், ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும் தாங்கிப் பிடிக்கும்‌ வகையில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார். தனிநபர் தங்கள் வளர்ச்சியை தாங்களே மேற்கொள்ள இந்த பட்ஜெட் வழிவகுத்துள்ளதாக தமிழிசை கூறினார்.

பட்ஜெட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். அதில் ஸ்டாலின் பேசியதை பதிவிட்டு, எல்லாதரப்புக்கும் நன்மை தரும் பூமாலை பட்ஜெட்டை காமாலைக் கண்களோடு பார்த்து விமர்சிக்கிறார் குறிப்பிட்டுள்ளார்.

        

மேலும், மோடி எதிர்ப்பு எனும் கருப்புக் கண்ணாடியை,  மோடி வெறுப்புக் கண்ணாடியை கழற்றி விட்டு பட்ஜெட்டை படித்தால் தமிழகத்துக்கான திட்டங்கள் தெரியும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close