[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தமிழக அரசு என ஒன்று செயல்படுகிறதா..?: உதயநிதி ஆவேசம்

udhayanidhi-stalin-criticized-tn-government

தமிழக அரசு என ஒன்று செயல்படுகிறதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். அதேபோல தாம்பரத்தில் நடைபெற்ற திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலினின் ‌மகனும்‌, நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதில் திமுகவின் கடைசி தொண்டனாக இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்” என்றார். அப்போது செய்தியாளர்கள் உதயநிதியிடம், தமிழக அரசின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி தமிழக அரசு என்று ஒன்று செயல்படுகிறதா..? என்றார்.

தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், இனி தன்னை அடிக்கடி திமுவின் மேடைகளில் காணலாம் என்றும் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசை நேரடியாக விமர்சித்து உதயநிதி இன்று பேசியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close