[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

பிப். 21ல் கட்சி பெயரை அறிவிக்கிறார் கமல்

kamal-will-announce-party-name-in-february-21

பிப்ரவரி 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து, தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்த்தெடுத்த சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருப்பதால் மக்களை சந்திக்கும் பயணத்தை தான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து தொடங்க இருப்பதாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். 

முதற்கட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், இ‌ந்த சந்திப்பு புரட்சி முழக்கமாகவோ, கவர்ச்சிக் கழகமாகவோ இல்லாமல், தனக்கான புரிதல், கல்வியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ‌

பிப்ரவரி 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக கூறியுள்ள கமல்ஹாசன், இது என் நாடு இதை நான் காப்பாற்ற வேண்டும், என்கிற எண்ணம் தமக்கு மாத்திரம் இருந்தால் போதாது என்றும் தலைவன் வழிநடத்த மட்டுமல்லாமல், பின்பற்றவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

        

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close