[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் ஜன.26ஆம் தேதி முதல் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்

kamal-hassan-new-political-announcement

தமிழகத்தில் ஜன.26ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். ட்விட்டரில் அரசை கடுமையாக சாடிவரும் கமல்ஹாசன், விரைவில் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பல வருடங்களாவே ரஜினி அரசியலுக்கு வருவாரா..? மாட்டாரா..? என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் தான் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. விரைவில் தனிக்கட்சி தொடங்கி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துபோட்டியிடுட உள்ளதாக ரஜினி தெரிவித்துவிட்டார். அதைப்போலதான் கமல்ஹாசனும் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கேற்ப கமல்ஹாசன் தன் பங்கு காய்களையும் நகர்த்தி வருகிறார்.

இந்நிலையில் ஒரு வார பத்திரிகையின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் ஜன.26ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக  தெரிவித்துள்ளார். சுற்றுப்பயண விவரங்கள்  ஜனவரி 18ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close