[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது

திருத்தி எழுதிய தீர்ப்புகள் வைரமுத்துவிற்கு வழக்கம்: மைத்ரேயன் சாடல்

admk-mp-maitreyan-comment-on-vairamuthu-speech-on-andal

பக்திக் கடலில் கவிஞர் வைரமுத்து கல் எறிந்துவிட்டதாக அதிமுக எம்.பி. மைத்ரேயன் விமர்சித்துள்ளார். 

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து வைரமுத்து வாசித்தக் கட்டுரைக்கு பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது, மைத்ரேயன் இணைந்துள்ளார். மைத்ரேயன் தனது பேஸ் புக் பக்கத்தில் வைரமுத்துவின் கட்டுரையை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். 

“கவிஞர் வைரமுத்து தன் பரபரப்பான கட்டுரை மூலம் பக்திக் கடலில் கல் எறிந்து பார்த்திருக்கிறார். காதல் இலக்கியத்தில் பக்தியைக் குழைத்து ஆண்டாள் வழங்கிய கவிதைகள் திவ்யப் பிரபந்தத்தில் தனித்துவம் மிக்க பகுதியாகும். தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர் டாக்டர் பூவண்ணன் ஆண்டாளைப் பற்றி குறிப்பிடும்போது வேயர் பயந்த விளக்காம் ஆண்டாள் மாயனை நயந்து பாடிய நாச்சியார் திருமொழி, அரங்கனிடம் கொண்ட அணை கடந்த காதல் வெள்ளம்  எனப் பாராட்டியுள்ளார். 

" மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழகில்லேன் காண்பாய் மன்மதனே " என்று பாடிய ஆண்டாளை பொதுமகள் நிலைக்கு தரம் தாழ்த்துவது காதல் சிறப்பு உணர்ந்த கவிஞரின் தகுதிக்குப் பொருந்தாது. அவரே ஒரு விரிவான, மனப்பூர்வமான மறுப்பு அறிக்கை தருவதுதான் சிறந்தது. திருத்தி எழுதிய தீர்ப்புகள் அவருக்கு வழக்கம்தானே” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து வருத்தம் தெரிவித்ததை ஹெச்.ராஜா வரவேற்று பேட்டி அளித்ததால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ஆனால், மைத்ரேயன் அந்தப் பிரச்னையை மீண்டும் எடுத்துள்ளார்.  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close