[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

டிடிவி தினகரனை பார்த்து தலைகுணிந்தபடி சிரித்த அமைச்சர்கள்!

ttv-dinakaran-said-about-assembly-and-ministers-smile

சட்டப்பேரவையில் தன்னை பார்த்ததும் அமைச்சர்கள் தலைகுணிந்து சிரித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன், முதல் முறையாக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று பங்கேற்றார். அவருக்கு திமுகவைச் சேர்ந்த கே.என்.நேரு வாழ்த்து தெரிவித்தார். ஆளுநர் உரை முடிந்து வெளியே வந்தபோது, ஸ்டாலினும், டிடிவி தினகரனும் சந்தித்துக் கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என்னை பார்த்து சிரிக்கக்கூடாது என அதிமுக தலைமையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, நிருபர்களாகிய நீங்கள் நேற்று என்னிடம் ஒரு கேள்வி கேட்டீர்கள். ஆனால் ஊகத்திற்கு எல்லாம் பதிலளிக்க முடியாது என அந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மறுத்துவிட்டேன். ஆனால் இன்று நீங்கள் கூறியது போலவே சில அமைச்சர் என்னை பார்த்ததும் தங்கள் தலையைக் குணிந்தபடி சிரித்துவிட்டு சென்றனர். பேரவையில் சிலர் என் எதிரில் சிரிக்கமால் முகத்தை திருப்பி சிரித்துக்கொண்டனர்.” என்று நகைச்சுவையாக கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close