[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

தங்க தமிழ்ச்செல்வனை தடுத்து நிறுத்திய காவலர்கள்

thanga-tamilsalvan-not-allowed-in-assembly

தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைய முன்ற தங்க தமிழ்ச்செல்வனை காவலர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்நிலையில், இதில் பங்கேற்க சட்டமன்றத்துக்குள் டிடிவி தினகரன் சென்ற பிறகு , சிறிது நேரத்தில் 4-ஆம் எண் நுழைவாயில் வழியாக கறுப்புச்சட்டை அணிந்தபடி தங்கத் தமிழ்ச்செல்வன் உள்ளே செல்ல முயன்றார். 

அவரை தடுத்த காவலர்கள், உள்ளே அனுமதிக்க மறுத்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை அனுமதிக்க வேண்டாமென வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் காவலர்கள் கூறினர். இதையடுத்து, அவர்களோடு தங்க தமிழ்செல்வன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரைத் தொடர்ந்து உள்ளே நுழைய முயன்ற வெற்றிவேலும் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close