[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு டீசல் விலை உயர்வை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது- வைகோ
  • BREAKING-NEWS பேருந்து கண்டன உயர்வை கண்டித்து தமிழகத்தில் ஜன.24இல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
அரசியல் 07 Jan, 2018 04:01 PM

நான் பேசியதை மூடிமறைக்கவே முதல்வர் அறிக்கை: மு.க.ஸ்டாலின்

mk-stalin-said-about-cm-palanisamy-statement

தான் பேசியதை மூடி மறைப்பதற்காக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருக்கலாம் என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஸ்டாலினிடம் விளக்கியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அவற்றை வெளியிடாமல் ஒருதலைபட்சமாக திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்குவகையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று முதலமைச்சரிடம் கூறினேன். அதற்கு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார். அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதை விட நீங்கள் அழைத்து பேசினால் உத்தரவாதமாக இருக்கும் எனவும், நீங்கள் ஏன் அழைத்து பேச மறுக்குறீர்கள் என்றும் முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். ஒருவேளை இதை மூடி மறைக்கவே முதலமைச்சர் மாற்றுக்கருத்துடன் அறிக்கை வெளியிட்டிருக்கலாம்.” என்றார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close