[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்

திமுக ஒருதலைபட்சமாக அறிக்கை: முதல்வர் பழனிசாமி விளக்கம்

cm-palanisamy-explains-about-mk-stalin-statement

எதிர்க்கட்சித் தலைவரிடம் தொலைபேசியில் தாம் தெரிவித்த கருத்துகளை கூறாமல் ஒருதலைபட்சமாக திமுக அறிக்கை வெளியிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர், போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஸ்டாலினிடம் விளக்கியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அவற்றை வெளியிடாமல் ஒருதலைபட்சமாக திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தமளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தொலைபேசியில் பேசிய ஸ்டாலின், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதாகவும், அப்போது ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுள்ள நிலையில் வேலைநிறுத்தம் செய்வது தவறானது என்று பதிலளித்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 2013ல் வழங்கிய 5.5 சதவிகித ஊதிய உயர்வை இப்போதைய 2.44 காரணியுடன் சேர்த்துப் பார்த்தால் தொழிலாளர்கள் கேட்டுள்ள 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு நிகராக அமைந்துள்ள விவரத்தை ஸ்டாலினிடம் விளக்கியதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஊதிய உயர்வின்படி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதிகபட்ச ஊதிய உயர்வு 11,361 ரூபாய் என்பது இதுவரை வழங்கப்படாத உயர்வாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழிற்சங்கங்களை சார்ந்தவர்களிடம் உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிட அறிவுறுத்துமாறு ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப மீண்டும் கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close