[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு
  • BREAKING-NEWS யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி
  • BREAKING-NEWS வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
  • BREAKING-NEWS யோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்

கமல்ஹாசனை கண்டித்து தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

ttv-dinakaran-supporters-protest-against-kamal-hassan

ஆர்.கே.நகர் மக்கள் மற்றும் டிடிவி தினகரனை இழிவுபடுத்தியதாக நடிகர் கமலின் உருவ படத்தை எரித்து டிடிவி ஆதரவு வழக்கறிஞர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

ஆர்.கே.நகர் இடைதேர்தல் முடிவு குறித்து நடிகர் கமல் தெரிவித்துள்ள கருத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட தினகரன் ஆதரவு வழக்கறிஞர்கள், ஆர்.கே.நகர் மக்களையும் டிடிவி தினகரனையும், நடிகர் கமல் இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டி, கோவை நீதிமன்றம் முன்பாக கமலின் உருவ படத்தை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தினகரனின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடிகர் கமல் செயல்பட்டுள்ளதாகவும், சினிமாவில் வேசம் போடும் கமல் மக்களிடம் வேசம் போட வேண்டாம் என தெரிவித்தனர். மேலும் படம் ஓட வேண்டும் என்பதற்காக நடிகர் கமல் அரசியலுக்கு வருவதாகவும், இவர் தினகரனை இழிவுபடுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கமலுக்கு எதிராக முழக்கமிட்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close