[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

மதவாத அரசியலின் முகம் ரஜினிகாந்த்: திருமாவளவன் விமர்சனம்

thirumavalavan-meet-k-karunanithi-and-said-about-rajinikanth

ரஜினிகாந்த் மதவாத அரசியலின் முகமாக இருக்கிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று திருமாவளவன் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்தின் அறிவிப்புகளும், நிலைபாடுகளும் அனைத்து தரப்பினரையும் கவரவில்லை என்று கூறினார். அத்துடன் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்காக மட்டுமே அவர் பேசுவதாகவும் தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் மதவாத அரசியலின் முகமாக இருப்பதாகவும் திருமாவளவன் விமர்சித்தார்.

இதற்கிடையே கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து பேசிய அவர், ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி தாம் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், மு.க.ஸ்டாலின் திமுக செயல் தலைவராக சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close