[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை

முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க காங். முடிவு?

rajya-sabha-standoff-over-triple-talaq-bill-cong-told-govt-will-support-bill-if-you-agree-to-pay-subsistence-allowance

பாதிக்கப்படும் முஸ்லீம் பெண்களுக்கு நிதி உதவியை உறுதி செய்யும் பட்சத்தில் ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘முத்தலாக்’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா’வை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடத்த வற்புறுத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை புறக்கணித்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

முத்தலாக் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிய அரசு, மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால், நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நேற்றும் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. நேற்று எதிர்க்கட்சி, ஆளும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக ஸ்மிரிதி ராணிக்கும், திரிணாமூல் எம்.பி. ஓ பிரையானுக்கும் இடையே கடுமையான சொற்போர் நிலவியது. குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். 

கடைசி நாளான இன்று முத்தலாக் மசோதாவை நிறைவேற்றிவிட அரசு தீவிரம் காட்டி வருகிறது. இன்றும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், தாமாகவே மசோதா அடுத்த கூட்டத்தொடருக்கு மாறிவிடும். இதனால், நேற்று இரவு பாஜக அரசு காங்கிரஸ், அதிமுக எம்.பி.க்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளது. கிரிமினல் வழக்காகவே பதிவு செய்யவும் காங்கிரஸ் ஆதரவு அளிக்க தயார் என்று கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்துள்ளது. அதாவது, கணவன் 3 ஆண்டுகள் சிறை சென்றுவிட்டால் மனைவியும், குழந்தைகளும் நிற்கதியாகிவிடுவார்கள். இதனால், கணவன் சிறையில் இருக்கும் காலத்தில் பாதிக்கப்படும் பெண் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதனை உறுதி செய்தால் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close