[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

கொள்கை‌யே தெரியாதவர் க‌ட்சி தொடங்குவது ஏன்?: பிரேமலதா விஜயகாந்த்

premalatha-vijyakanth-said-about-kamal-and-rajinikanth

கொள்கை‌ என்னவென்று தெரியாதவர் க‌ட்சி தொடங்குவது ஏன் என நடிகர் ரஜினிகாந்திற்கு பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.‌ 

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தி, கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிகவின் சார்பில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் யார் புதிய கட்சி தொடங்கினாலும் அது பற்றி தேமுதிகவுக்கு கவலையில்லை என்று கூறினார்.

அத்துடன் ட்விட்டர் மூலம் மட்டுமே ஆட்சி நடத்த முடியாது எனவும், கொள்கை‌ என்னவென்று தெரியாதவர் க‌ட்சி தொடங்குவது ஏன்? எனவும் அவர் விமர்சித்தார். கடந்த 4 ஆண்டு‌களாக கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை‌கள் நிலு‌வைத்தொகை வழங்காததால் அவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக கூறினார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close