[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

வன்முறை தூண்டும் பேச்சு: ஜிக்னேஷ், உமர் காலித் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

bhima-koregaon-violence-fir-against-jignesh-mevani-umar-khalid-for-provocative-speeches-in-pune

பீமா கோரேகான் வன்முறை சம்பவத்தில் இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, குஜராத் மாநில வட்காம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் ஆகியோர் மீது புனே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கோரேகாவ் போரின் 200வது ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி புனேயில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே ஜனவரி ஒன்றாம் தேதி திரளான தலித் மக்கள் திரண்டிருந்தனர். அதற்கு சில வலதுசாரி இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை விரட்டியடித்தனர். இதில், தலித் இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் மகாராஷ்டிரா முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி மகாராஷ்டிரா முழுவதும் பந்த் நடைபெற்றது. மும்பை மற்றும் புனே நகரங்கள் முற்றிலும் ஸ்தம்பித்தது.

இதனிடையே, பீமா-கோரேகான் போர் நினைவு நாளையொட்டி கடந்த டிசம்பர் 31-ம் தேதி, நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், பிரகாஷ் அம்பேத்கர், ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 

          

இந்த நிகழ்ச்சியில் இருபிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஜிம்கானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அக்‌ஷ்ய பிடாட், ஆனந்த் தோன்ட் என்ற இரண்டு இளைஞர்கள் இந்தப் புகாரை அளித்தனர். ஜிக்னேஷ் மற்றும் உமர் பேசிய வீடியோ காட்சிகளையும் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், ஜிக்னேஷ் மேவானி மற்றும் உமர் காலித் ஆகிய இருவரின் மீதும் புனே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close