[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

ஹிந்தி தேசிய மொழியா?: சுஷ்மாவுக்கு சசி தரூர் எதிர்ப்பு

shashi-tharoor-says-not-national-language

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழியாக ஹிந்தியை ஆக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பெரும்பன்மையிலும் இறுதியில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடனும் தீர்மானம் நிறைவேற்றபட்டால் ஐ.நாவில் ஒரு மொழி அதிகாரபூர்வ மொழியாகும். இப்போது  ஆங்கிலம், பிரெஞ்சு ஸ்பானிஷ், ரஷியன், சைனீஸ் அரபு மொழிகள்  அதிகாரபூர்வ மொழிகள்.   

இந்நிலையில், மக்களவையில் பேசிய சுஷ்மா சுவராஜ், ஐ.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தி மொழியை அறிவிக்கச் செய்ய ஐ.நா. உறுப்பு நாடுகளின் 129 நாடுகள் ஆதரவை திரட்டப்போவதாக அறிவித்தார். மேலும், தானும், பிரதமர் மோடியும் ஐ.நா.வில் ஹிந்தியில் பேசியதை சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசுகையில், ஹிந்தி மொழியை ஊக்குவிக்க வேண்டிய என்ன தேவை உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் பேசிய அவர், “ஹிந்தி நாட்டின் தேசிய மொழி கிடையாது. ஆட்சி மொழிதான். ஹிந்தியை ஊக்குவிப்பது கேள்வி எழுப்பச் செய்கிறது. ஐ.நா.வின் அலுவல் மொழியாக ஹிந்தியை ஆக்க வேண்டிய தேவை என்ன உள்ளது. அரபிக் மொழிக்கு ஹிந்தியை விட அதிக ஸ்பீக்கர்கள் இல்லை. ஆனால், அரபிக் 22 நாடுகளில் பேசப்படுகிறது. ஹிந்தி மொழி ஒரே ஒரு நாட்டில்தான் அலுவல் மொழியாக உள்ளது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ஹிந்தி பேசும் மக்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல், ஹிந்தி பேசாத மக்களும் இந்தியனாக இருப்பதற்குப் பெருமை கொள்ள வேண்டும் என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close